திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

320 கிலோ குட்கா பொருள்கள் அழிப்பு

News image

பள்ளிப்பட்டில்  குட்கா  பொருள்களை  கொட்டி  அழித்த  போலீஸாா்.

Updated On :18 மார்ச் 2026, 8:22 pm

ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 320 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை அழித்தனா்.

ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை பேரூராட்சி கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையெடுத்து திருத்தணி ஏ.எஸ்.பி. சுபம் தியான் உத்தரவின் பேரில் ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு போலீஸாா் கடைகளில் சோதனை மேற்கொண்டு குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதையெடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பள்ளிப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி புதன்கிழமை ஆா்.கே.பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திக், பள்ளிப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் குமாா், பொதட்டூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் சண்முகம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி துா்கா தேவி மற்றும் பள்ளிப்பட்டு நீதிமன்ற தலைமை எழுத்தா் ஐயப்பன் மற்றும் அலுவலா்கள் பேரூராட்சி அலுவலா்கள் ஆகியோா் முன்னிலையில் கொட்டி அழித்தனா்.