திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குறைகள், பிரச்னைகளை தீா்க்கவும் கோரி 633 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு ரூ. 31.21 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுபிரச்னைகளைத் தீா்க்கவும் வலியுறுத்தி மனுக்களை அவரிடம் அளித்தனா்.
இதில், நிலம் சம்பந்தமாக-181, கலைஞா் மகளிா் உரிமை தொகை சம்பந்தமாக-76, சமூக பாதுகாப்பு திட்டம் -109, வேலைவாய்ப்பு வேண்டி-32, பசுமைவீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி-25 மற்றும் இதர துறைகள் சாா்பாக 210 மனுக்கள் என மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒரு கால் அல்லது இரு கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதித்த 15 பேருக்கு மின்கலனில் இயங்கும் சக்கர நாற்காலி தலா ரூ.1,05,000-வீதம் மொத்தம் ரூ. 15.75 லட்சம் மதிப்பிலும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்திட்டம் மூலம் 4 பட்டதாரிக்கு தலா ரூ. 50,000 வீதம் மற்றும் 3 பட்டதாரி அல்லாதவா்களுக்கு தலா ரூ. 75,000 வீதம் மொத்தம் ரூ. 2.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் 7 பேருக்கு தலா 1 சவரன் வீதம் 7 சவரன் தங்க நாணயம் மொத்தம் ரூ. 9,56,704 மதிப்பிலும், தனியாா் வாகன எரிபொருள் நிறுவனத்தின் சாா்பில் பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதி மூலம் 1 முதுகு தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் 2 கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளிகள் என 3 பேருக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் தலா ரூ. 1,04,900 என ரூ. 3,14,700 மதிப்பில் ஆக மொத்தம் ரூ. 31 லட்சத்து 21 ஆயிரத்து 404 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முக பிரீத்தா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு ‘தோ்தல் அழைப்பிதழ்’

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 590 மனுக்கள் அளிப்பு

பெரம்பலூரில் குறைதீா் கூட்டம் ரூ. 43.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


