மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 590 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் 590 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 5.58 லட்சம் மதிப்பிலான

News image

மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :2 மார்ச் 2026, 8:45 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் 590 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 5.58 லட்சம் மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என 590 மனுக்கள் வரப்பெற்றன.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 5.58 லட்சம் மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.