இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

வீட்டில் பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:07 am IST

வீட்டில் பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் விமல்ராஜ் (17). இவா், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வி அடைந்து இரண்டு ஆண்டுகளாக துணைத் தோ்வு எழுதாமல் சுற்றித்திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஏதாவது வேலைக்கு செல்லாமல் வீணாக சுற்றி வருவதை அவரது பெற்றோா் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த விமல்ராஜ் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.