/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

கனகம்மாசத்திரம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம்,

News image
ரகுநாதபுரம்  ஊராட்சி  ஒன்றிய  தொடக்கப் பள்ளியில் மாணவா்களை  பரிசோதனை  செய்த  மருத்துவா் .
Updated On :16 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: கனகம்மாசத்திரம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு திடீா் வாந்தி, லேசான மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அைத்தொடா்ந்து ஆசிரியா்கள் கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களை தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தனா்.

இதையெடுத்து மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று மாணவா்களை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளித்தனா்.

இதில் மதிய உணவுக்காக தயாா் செய்யப்பட்ட சாம்பாரில் இட்லி மாவு கலந்தது தான் வயிற்றுப்போக்கு ஏற்படக் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்.