வேகத்தடை, சாலையை விரிவுப்படுத்த கோரி மறியல்


பொதட்டூா்பேட்டையில் வேகத்தடை, சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி அடுத்துள்ள பொதட்டூா்பேட்டையில், காஞ்சிபுரம் தெரு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், காா்கள், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
குறுகிய சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலா் காயமடைந்துள்ளதாக அப்பகுதி பெண்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைவைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை வாகன விபத்தை தடுக்க வேகத்தடை மற்றும் சாலையை விரிவுப்படுத்த வலியுறுத்தி பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்ட னா்.
தகவலறிந்து ஆா். கே.பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திக், பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் நரசிம்மன் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது. இந்த பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்கப்படும் என்றும், சாலையை விரிவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...