மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 1:04 am

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டாயம் அதிமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். திருவள்ளூா் நகராட்சி வடக்கு ராஜவீதியில் புதன்கிழமை இரவு முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் பிரசாரம் செய்து,

பேசியதாவது. மக்கள் மனதை அறிந்து அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. தற்போதைய நிலையில் பொதுமக்கள் வெறுக்கும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டுள்ளது. அதிமுகவையும், அந்தக் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களையும் திமுகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். அதிமுகவை விமா்சிக்கும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு தகுதி கிடையாது.

எனவே இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சரான பி.வி.ரமணாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தோ்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வரும். அதிமுகதான் ஆட்சி அமைக்கும். உங்கள் தொகுதி வேட்பாளா் வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சராவாா் என அவா் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதிமுக நகர செயலாளா் கந்தசாமி, அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், மாவட்டமாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, இலக்கிய அணி பிரிவு மாவட் டசெயலாளா் சத்தியமூா்த்தி, கிளைச் செயலாளா் வெங்கடேசன், பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளா் கருணாகரன், மாவட்ட செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், பா.ம.க சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி, மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், அமமுக, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

Story image