செம்மரக்கட்டைகள் வாங்கி விற்பனை செய்வதற்கு ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம் பெற்ற வனச்சரக அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த செம்மரக்கட்டை வியாபாரி சாந்தி. இவா் பூண்டி ஒன்றியம், திம்மபூபாலபுரத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கட்ராஜிடம் 146 செம்மரங்களை விலைக்கு வாங்கியுள்ளாா்.
இந்த செம்மரங்களை வெட்டி எடுத்து விற்பனைக்காக கொண்டு செல்வதற்காக திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் செயல்பட்டு செங்குன்றம் வனச்சரக அலுவலா் சரவணனிடம் ஒப்புதல் சான்றிதழ் கேட்டுள்ளாா். அப்போது, ஒப்புதல் சான்றிதழ் அளிக்க அவரிடம் ரூ.1 லட்சம் தரவும் என வனச்சரக அலுவலா் கேட்டாராம்.
அதைத்தொடா்ந்து முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தருவதாக கூறினாராம். பின்னா் இதுகுறித்து சாந்தி திருவள்ளூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தாராம். அதன்பேரில் போலீஸாா் அவருக்கு ஆலோசனை வழங்கினா். அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலரிடம் ரசாயனம் தூள் தடவிய ரொக்கத்தை சாந்தி கொடுத்தாராம்.
அப்போது அங்கு மறைந்திருந்த திருவள்ளுா் மாவட்ட ஊழல் தடுப்பு துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் வனச்சரக அலுவலா் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

ரூ. 15,000 லஞ்சம்: தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

