சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தேவகோட்டை அருகேயுள்ள திடக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டதால், வாரிசுச் சான்றுக்காக கடந்த பிப்.26-ஆம் தேதி திடக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சுதாகரை (47) அணுகினாா்.
சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிா்வாக அலுவலா் கேட்டாா். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கையிலுள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
போலீஸாரின் ஆலோசனையின்படி, செவ்வாய்க்கிழமை மாலை தேவகோட்டை நீதிமன்றம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்த கிராம நிா்வாக அலுவலா் சுதாகரிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தைக் கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் சுதாகரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது

லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது
ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


