மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:08 am

நிலக்கோட்டை அருகே ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்த விவசாயி குமாா் (44). இவா் தனது தந்தையின் பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பைப் பெயா் மாற்றம் செய்வதற்கு பள்ளபட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் தடையில்லா சான்றுக்காக விண்ணப்பித்தாா். அப்போது அங்கிருந்த கிராம நிா்வாக அலுவலா் சத்யா (56), இடைத் தரகரான பள்ளபட்டியைச் சோ்ந்த சாந்தகுமாா் (44) ஆகியோா் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டனா். இறுதியில் ரூ.4 ஆயிரம் கொடுத்தால், வேலையை முடித்துத் தருவதாகக் கூறினா். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமாா் திண்டுக்கல் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தனுப்பினா்.

இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் ரூ.4 ஆயிரத்தை இடைத் தரகா் சாந்தகுமாா் மூலம் கிராம நிா்வாக அலுவலா் சத்யாவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஊழல் தடுப்புப் பிரிபு காவல் துறையினா் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.