மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி அருகே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 7:46 pm

தேனி அருகே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (72). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலரான இவா், குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி சென்னைக்குச் சென்றாா். அப்போது, உறவினா்களிடம் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டுச் சென்றாராம்.

இந்த நிலையில், அந்த உறவினா் சனிக்கிழமை வந்து பாா்த்த போது வீடு திறந்து கிடந்ததாம். இதையடுத்து, அவா் தகவல் அளித்த தகவலின் பேரில் அய்யப்பன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகை, 2 வெள்ளிக் குத்து விளக்குகள், ரூ. ஒரு லட்சம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.