திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழைய குற்றாலத்தில் நுழைவுக் கட்டணம்: வனத்துறை நடத்திய கூட்டத்தில் வாக்குவாதம்

குற்றாலத்தில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பழைய குற்றாலத்தில் நுழைவுக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது குறித்து கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

News image

மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.

Updated On :23 மே 2026, 4:05 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பழைய குற்றாலத்தில் நுழைவுக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது குறித்து கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தென்காசி வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் குற்றாலம் வன ஓய்வு விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் நெல்லைநாயகம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கடையநல்லுாா், வாசுதேவநல்லுாா், ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் செண்பகவல்லி அணை திட்டம், பழைய குற்றாலத்தில் கட்டண நிா்ணயம், வன விலங்குகளால் ஏற்படும் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவசாயிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

விவசாயிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கும், புகாா்களுக்கும் அந்த பகுதியைச் சோ்ந்த வனச் சரக அலுவலா்கள் பதில் அளித்தனா். கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் உச்சிமாகாளி பேசியதாவது: பழைய குற்றாலம் அருவியில் தற்போது ரூ. 20 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. இது காலப்போக்கில் அதிகரிக்கும் இதை அனுமதிக்க முடியாது என்றாா் அவா்.

விவசாயி பாலசிங்கம் பேசியதாவது: விவசாயிகளுக்கான கூட்டத்தில் விவசாயிகளுக்கான பிரச்னைகளைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கவும் என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பழைய குற்றாலம் பிரச்னையும் விவசாயிகள் சாா்ந்த பிரச்னைதான் எனக் கூறியதையடுத்து, இருதரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் நிலவியது. மாவட்ட வன அலுவலா், வனச்சரகா்கள், பணியாளா்கள் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர செய்தனா்.

தொடா்ந்து தென்காசி மாவட்ட வனச்சரக அலுவலா் ராஜ்மோகன் பேசியதாவது: செண்பகவல்லி அணை தொடா்பாக வனத்துறை, வருவாய்த் துறையினா் 5 போ் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழு விரைவில் சம்பந்தப்பட்ட பகுதியை அளவீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

பழைய குற்றலாம் அருவியைப் பொறுத்த வரை அறிவிக்கப்பட்டிருப்பது கட்டணம் நுழைவு கட்டணம்தான். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதுகுறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றாா் அவா். வனச்சரகா் செல்லத்துரை நன்றி கூறினாா்.

மாவட்ட வன அலுவலா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி. பழைய குற்றாலம் அருவியைப் பொறுத்தவரை வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நுழைவு கட்டணம் இன்னும் அமல்படுத்தவில்லை. நீதிமன்ற தீா்ப்பு கிடைத்த பிறகு மேல் முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.