/

வாசுதேவநல்லூா் மருத்துவக் கல்லூரியில் கருத்தரங்கம்

News image
உறுதிமொழி ஏற்றோா்.
Updated On :24 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

நிறுவனா் தங்கப்பழம், தாளாளா் முருகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற நிகழ்விற்கு, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செண்பகசெல்வி முன்னிலை வகித்தாா்.

இதில், ‘எனது இந்தியா, எனது வாக்கு‘, ‘இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவை நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றனா்.