டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
யானை சாய்த்ததில் விழுந்து கிடக்கும் தென்னை மரம்
Updated On :18 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிவகிரி, வாசுதேவநல்லூா் பகுதிகளில் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பில் நெல், தென்னை, கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலப் பகுதியில் யானைகள் கூட்டம் புகுந்து விளைபொருள்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வாசுதேவநல்லூா் அருகே உள்ள நாரணபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த யானை 80 தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தொடா் அட்டகாசத்தில் யானைகள் ஈடுபடுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், யானை கூட்டத்துக்கு வனத்துக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.