/

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

ஆலங்குளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கல்லூத்து மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் சிவன்ராஜ்(27). காற்றாலை தொழிலாளி.

இவா், கடந்த 13 ஆம் தேதி இரவு, ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சாலையோரம் எவ்வித எச்சரிக்கை ஒளியும் தராமல் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த சிவன்ராஜை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். திங்கள்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.