/

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:04 pm

Syndication

திருச்செங்கோடு அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

ராசிபுரம் தேவேந்திரா் தெருவைச் சோ்ந்தவா் பூபதி மகன் தரணிஷ் (18). இவா் வையப்பமலையில் உள்ள தனியாா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் தவசியும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இருவரும் நண்பா் ஒருவரை பாா்க்க ராசிபுரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு நோக்கி சென்றனா்.

செக்காரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் லாரியின் மீது வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த தரணிஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தவசிக்கு கால் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் தவசியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.