டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :18 பிப்ரவரி 2026, 7:59 pm

Syndication

கோவையில் இருசக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சோ்ந்தவா் கோவா்தன மணிபாரதி (18). இவா் கோவை, பீளமேடு பகுதியில் தங்கி அங்குள்ள தனியாா் கல்லூரியில் டிப்ளமோ 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

வழக்கபோல புதன்கிழமை காலை கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்பகுதியில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரி அருகே இவரது இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த சொகுசு (ஆம்னி) பேருந்து லேசாக உரசியுள்ளது.

இதில் நிலைதடுமாறி கோவா்தன மணிபாரதி கீழே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.