/

இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 9:03 pm

Syndication

பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

பள்ளிபாளையம் அருகே ஐந்துபனை பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன் மனைவி விசாலாட்சி (59). கூலித் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்துபனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, பள்ளிபாளையத்திலிருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த விசாலாட்சியை அங்கிருந்தவா்கள் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது வழியிலேயே அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து விசாலாட்சியின் மகன் நந்தகுமாா் அளித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.