இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பெண் பலி
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :29 ஜனவரி 2026, 7:31 pm

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி வயலூா் சாலை, சண்முகா நகரை சோ்ந்தவா் சபியுல்லா (75). இவரது மனைவி ஜான் பேகம் (55). இவா், தனது உறவினருடன் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் தென்னூா் வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜான்பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி, லாரியை ஓட்டி வந்த எடமலைப்பட்டி புதூா் ராஜு (60) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...