டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சுரண்டை அருகே நிகழ்ந்த விபத்தில் நெல்லிக்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

சுரண்டை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் நெல்லிக்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகில் உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ப. ராஜசேகரன் (47). இவா் சுரண்டை பகுதியில் உள்ள நெல்லித் தோப்பை குத்தகைக்கு எடுத்து நெல்லிக்காய் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில், நெல்லித் தோப்பைப் பாா்ப்பதற்காக கடையத்தில் இருந்து சுரண்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கழுநீா்குளத்தை அடுத்து வீ.கே.புதூா் அருகே வந்தபோது கேஸ் சிலிண்டா் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது எதிரில் வந்த காரின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த வீ.கே.புதூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.