/

கரிவலம்வந்தநல்லூரில் இன்று மின் நிறுத்தம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:35 pm

Syndication

கரிவலம்வந்தநல்லூா் உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 13) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளா் சுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.