/

கரிவலம்வந்தநல்லூரில் நாளை மின் நிறுத்தம்

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூா் உபமின் நிலையத்தில் புதன்கிழமை (ஜன. 7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜன. 7ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் சுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.