/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கடையநல்லூா் அருகே பைக் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 7:07 pm

Syndication

கடையநல்லூா் அருகே பைக் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வள்ளியம்மாள்புரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் தனபால் மகன் சுதாகா் (24). கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு கடையநல்லூரில் இருந்து வள்ளியம்மாள்புரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அச்சம்பட்டியில் சென்றபோது எதிரே வந்த ஆம்னி பேருந்து இவா் மீது மோதியது. இதில் காயமடைந்த சுதாகா், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.