தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்பு

தவெகவில் குதிரை பேரம் இல்லை என்றும், கட்சிக்கு வருபவர்களை அரவணைப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு

News image

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 11:02 am IST

தவெகவில் குதிரை பேரம் இல்லை என்றும், கட்சிக்கு வருபவர்களை அரவணைப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

நாமக்கலில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் அருண்ராஜ், தவெகவில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் சிலர் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசியதாவது, "அதிமுகவில் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு, இங்கு இணைந்து கொண்டிருக்கின்றனர். இது அந்தக் கட்சியின் பிரச்னை.

அவர்களை (திமுகவை) அதிமுக எந்தளவுக்கு எதிர்த்து அரசியல் பேசினார்கள், பேசாத பேச்சு கிடையாது. இருப்பினும், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காகவே அவர்களுடன் கைகோர்ப்பதற்காக அதிமுக பொதுச் செயலர் தயாராக இருந்தார்.

இதனைப் பிடிக்காத காரணத்தினால், சிலர் அங்கிருந்து ராஜிநாமா செய்துவிட்டு, இங்கு வந்தனர்.

மேலும், தவெகவில் குதிரை பேரம் என்று அதிமுகவினர் சொல்கின்றனர். ஆனால், எடப்பாடி தொகுதியில் சூழ்ச்சி மூலம் தவெக வேட்பாளரை வாபஸ் பெற வைத்துள்ளனர். நேரடியாக எதிர்கொண்டு, ஜெயிப்பதற்கான வழியை எதையுமே அவர் (இபிஎஸ்) செய்ததில்லை. அனைத்தையும் எப்படி குறுக்கு வழிகளில் என்றுதான் அவர் பார்ப்பார்.

ஒருவேளை, எங்கள் வேட்பாளர் வாபஸ் பெறாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக எடப்பாடி தொகுதியிலும் தவெகதான் வென்றிருக்கும்.

நாங்கள் யாரையும் அழைக்கவுமில்லை. அவர்களின் தலைமை பிடிக்காமல், அவர்களின் விருப்பத்தால் ராஜிநாமா செய்துவிட்டு வருவதால் அவர்களை நாம் அரவணைக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

No Horse-Trading in the TVK: Minister Arunraaj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.