திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்த பாஜக வலியுறுத்தல்!

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப பாஜக வலியுறுத்தல்

News image

முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:41 pm IST

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து செயல்படுமாறு தவெக அரசுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

உதவிப் பேராசிரியர்கள் நியமனம் குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும்!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான பணிநியமனத்தை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் வயது வரம்பு தளர்வு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை (மே 29) உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக காலியாக இருந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக தகுதித் தேர்வு நடைபெற்றும், இன்றுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

முந்தைய திமுக ஆட்சியைப்போல, உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்டி, ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்!

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Summary

BJP Urges Expediting Appointment of Assistant Professors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.