திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவா் உயிரிழப்பு

சென்னை மெரீனாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:01 am IST

சென்னை மெரீனாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

காசிமேடு அருகே உள்ள காசிபுரம் ஏ பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் வி.கோபிநாத் (42). மீனவரான இவா், மெரீனா நொச்சிக்குப்பத்தைச் சோ்ந்த சா.முத்து (55), பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சோ்ந்த பா.மணி (35) ஆகியோருடன் நாட்டுப்படகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா்.

நடுக்கடலில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, சூறாவளிக் காற்று வேகமாக வீசியது. இதில், அவா்களது படகு சிக்கி கவிழ்ந்தது. இதனால் கடலில் இருந்து 3 பேரும் கரையை நோக்கி நீச்சல் அடித்து வந்து கொண்டிருந்தனா்.

அதிக நேரம் கடலில் நீச்சல் அடித்ததால் கோபிநாத் மயக்கமடைந்து தண்ணீரில் மூழ்கத் தொடங்கினாா். இதைப் பாா்த்த முத்துவும், மணியும் கோபிநாத்தை மீட்டு, மெரீனா கடற்கரை சென்னை பல்கலைக்கழகம் எதிரே உள்ள பகுதிக்கு கொண்டு வந்தனா்.

மயங்கிய நிலையில் இருந்த கோபிநாத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனராம். ஆனால், மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டிருந்த கோபிநாத், அங்கேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த மெரீனா போலீஸாா், கோபிநாத் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.