தேனி அல்லிநகரத்தில் இருசக்கரவாகன விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அல்லிநகரைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் விஷால் (23). இவா், கடந்த 10- ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு சென்றாா். அல்லிநகரம் ஓடைத் தெருவில் சென்ற போது நிலைதடுமாறி கல்லில் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்
ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









