திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விதிமீறல்களுடன் செயல்பட்ட 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்!

விதிமீறல்களுடன் செயல்பட்ட 67 குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறித்து...

News image

இயற்கை வளங்கள்துறை அமைச்சர் டி.கே.பிரபு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியினை திடீர் ஆய்வு மேற்கொண்டார். - படம்: டிஐபிஆர்

Updated On :29 மே 2026, 6:41 pm IST

விதிமீறல்களுடன் செயல்பட்டுவந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.

இந்தக் கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்த அளவிற்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. அதேபோல, மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணையம் (SEIAA), கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் கல்குவாரிகளை கண்காணிக்கும் சேப்டி மைன்ஸ் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கல்குவாரிகளை கண்காணிக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து கல்குவாரிகளின் அந்தந்த மாவட்ட கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட அனுமதி ஆணைப்படி கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுகின்றனவா, உரிய அனுமதியோடு கனிமங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பது உள்ளிட்ட அனைத்து இனங்களையும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு, கடந்த வாரத்தில் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த உத்திரவிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த 1 வாரமாக தீவிர சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் 431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 67 குவாரிகளின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 88 குவாரிகளின் குவாரி பணியினை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில், 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு சட்டவிதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கனிமங்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனங்களை சோதனை செய்ததில், சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துசென்ற 469 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்டது கனிமவளத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி குவார்ட்ஸ் கனிமம் வெட்டி எடுக்கப்பட்டது, கனிமவளத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவுசெய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் சுரங்கம் மற்றும் குவாரி பணிகளானது ஒப்புதல் பெற்ற சுரங்க திட்டத்தின்படியும் மற்றும் குவாரி குத்தகை நிபந்தனைகள்படியும் குத்தகைதாரர்கள் குவாரிபணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குத்தகைகாலம் முடிவுற்று காலாவதியான குவாரிகள் மற்றும் தற்போது இயக்கத்தில் இல்லாத குவாரிகள் அல்லது அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுத்துச்செல்வது கண்டறியும்பட்சத்தில் சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

67 stone quarries operating in violation of regulations have been temporarily closed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.