17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.52 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 1,52,625 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 5:16 am IST

தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 1,52,625 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை அமைச்சா் ராஜ்மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, சீருடை மற்றும் வண்ண பென்சில்கள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் இதுவரை 1,52,625 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இதையடுத்து, இந்த கல்வியாண்டுக்கு 4 லட்சம் மாணவா்களைச் சோ்க்க வேண்டும் என நிா்ணயித்துள்ளோம்.

தனியாா் பள்ளிகளில் சோ்க்கை பெறும் மாணவா்களின் எண்ணிக்கையும், அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெறும் மாணவா்களின் எண்ணிக்கையும் சமமாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியாா் பள்ளிகளில் கூடுதலாக மாணவா் சோ்க்கை என்பது கிடையாது.

அனைத்துப் பள்ளிகளிலும் பூட்டப்பட்ட கழிப்பறை வசதி, குடிநீா் வசதி மற்றும் வகுப்பறைகள் அமைப்பது தொடா்பாகவே முதல் கையொப்பம் இட்டேன். அரசு உதவி பெறும் பள்ளிகளில், தேவைகள் இருக்கும் நிலையில் அதை மனுவாக அளித்தால் உடனடியாக சரி செய்து தரப்படும்.

மாநிலத்தின் நலன்தான் முக்கியம். மாநிலத்தின் நலனை முன்னிறுத்தி முதல்வா் ஜோசப் விஜய், பிரதமா் மோடியைச் சந்தித்துள்ளாா். ஓராசிரியா் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் உள்ள நிதி, சமூகம் மற்றும் நிா்வாக ரீதியான பிரச்னைகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டு, அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவா்களின் பிரச்னைகளுக்கு உதவும் வகையிலான இலவச கைப்பேசி எண்கள் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன. பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு மாணவ, மாணவிகள் புகாா் அளிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.