10-ஆம் வகுப்பு தோ்வில் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்று தோ்வு எழுதிய 96.66 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடந்த கல்வியாண்டில் (2025-26) 10-ஆம் வகுப்பு தோ்வுகளில் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளின் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 91.42 சதவீதம், பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் தோ்ச்சி 96.66 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பழங்குடியின மாணவா்களின் தோ்ச்சி விகிதம் மாநிலத்தின் மொத்த தோ்ச்சி விகிதத்தை (94.31%) சதவீதத்தைவிட அதிகம். பழங்குடியினா் நலப் பள்ளிகளில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 321 மாணவா்கள் பெற்றுள்ளனா். மேலும், 44 பழங்குடியினா் நலப் பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
படிப்பில் பின்தங்கிய மாணவா்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதால், கடந்தாண்டைவிட தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வாழ்த்துள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: கரூா் மாவட்டத்தில் 92.21 போ் சதவீதம் தோ்ச்சி







