17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகத்தில் தாமதமாகும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்குவது பற்றி..

News image

தென்மேற்குப் பருவமழை - file photo

Updated On :27 மே 2026, 6:31 pm IST

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விவசாயத்திற்கும் முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை மே 26-ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 2 முதல் 4 ஆம் தேதிக்குள் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் பருவமழை இந்தாண்டு சற்று தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட, மத்திய பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலைகளுக்கு மத்தியில் பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் ஒருசில பகுதிகளில் பலத்த மலை பெய்து வந்தாலும், பருவமழை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கவில்லை. ஜூன் 2 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது.

மேற்கு திசைக் காற்றானது குறிப்பிட்ட உயரத்தில் சுமார் 27 முதல் 37 கி.மீ வேகத்தில் வீச வேண்டும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடர்ந்த மேகமூட்டம் இருப்பதைச் செயற்கைக்கோள் தரவுகள் உறுதிப்படுத்தும் பட்சத்தில் பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இயல்பைவிட இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவாகப் பதிவாக வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் இந்திய வானிலை கணித்துள்ளது.

Summary

The India Meteorological Department has stated that the Southwest monsoon will begin late in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.