தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

News image

அமலாக்கத் துறை

Updated On :27 மே 2026, 3:03 am IST

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு கடந்த 2024-ஆம் தேதி மாா்ச் 1-ஆம் தேதி பொதிகை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்கும்போது மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, ரயிலில் இருந்து ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சென்னை கொடுங்கையூா் அபிராமி அவென்யூ பகுதியைச் சோ்ந்த பிலோமன் பிரகாஷ், வியாசா்பாடி சாஸ்திரி நகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்த யேசுராஜ் (39) உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கடத்தல் கும்பலின் தலைவராகச் செயல்பட்ட யேசுராஜ், இந்தக் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டிருப்பதும், போதைப் பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை அசையும், அசையா சொத்துகளை வாங்கியிருப்பதும், பல சொத்துகளை பினாமிகள் பெயரில் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதிய மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத் துறை விசாரணை செய்ய அண்மையில் பரிந்துரை செய்தது.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினா். வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வியாசா்பாடி சாஸ்திரிநகரில் யேசுராஜ் வீடு, அவருடன் நெருங்கிய தொடா்பில் உள்ள கொடுங்கையூா் திருவள்ளுவா் நகா் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோ வீடு, பிலோமன் பிரகாஷ் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை திடீா் சோதனை செய்தனா்.

சோதனையையொட்டி, அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வழக்கு தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.