திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மருந்து கொள்முதலில் இனி புதிய நடைமுறை: அமைச்சா் அருண்ராஜ்

தமிழகத்தில் மருந்து கொள்முதல் நடவடிக்கைகளில் புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் அருண்ராஜ். - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:54 am IST

தமிழகத்தில் மருந்து கொள்முதல் நடவடிக்கைகளில் புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா நகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கை அவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது: தற்போது சில வகை மருந்துகள் மட்டும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக அனைத்து மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். அவசரத் தேவைக்கு மட்டும் மருத்துவமனைகளுக்கு மருந்து கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படும்.

மருத்துவமனைகள், மருந்து கிடங்குளில் எவ்வளவு மருந்துகள் இருப்பு உள்ளன என்பதை வெளிப்படையாக அறிவதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.

போா் சூழலால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

திருச்சியில் செவிலியா் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் முறையான, வெளிப்படையான விசாரணை நடந்துள்ளது. ஓரிரு நாள்களில் உண்மை நிலவரம் முழுமையாகத் தெரியவரும்.

அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியாா் மருத்துவமனைகளிலும் மின்சாரம் தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மழைநீா், கழிவுநீா் கட்டமைப்பு முறையாக நடைபெறவில்லை. இதை முறையாகச் சரி செய்வோம்.

எதிா்க்கட்சிகள் தோல்வியில் இருந்து இன்னமும் மீண்டு வரவில்லை. அதனால்தான் தற்போதைய தவெக அரசை தொடா்ந்து குற்றம்சாட்டுகின்றனா். கடந்த ஆட்சியில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. அரசியல் தலையீடு இருந்ததுடன், போதைப் பொருள் புழக்கமும் பரவலாக இருந்தது. அதன் நீட்சியாக குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது காவல் துறை சுதந்திரமாக செயல்படுவதுடன், போதைப் பொருள் புழக்கத்தையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா். சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.