தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவை சிறுமி பாலியல் கொலை! முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார்: சூலூர் எம்எல்ஏ

கோவை சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என சூலூர் எம்எல்ஏ சுகுமார் உறுதி

News image

டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

Updated On :23 மே 2026, 5:33 pm IST

கோவை சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என சூலூர் எம்எல்ஏ சுகுமார் உறுதியளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதாவது, "சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்தவுடன் முழுமையான தகவலும் தெரியவரும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பார். அவர்களின் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்காக என்னால் முடிந்த நிதியுதவி அளித்தேன். அதிகபட்ச நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளேன்.

சம்பவ இடத்தை இதுவரையில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு முன்னர் இதே இடத்தில் 6 சம்பவங்கள் நடந்துள்ளன. வடமாநிலத்தவரைத் தாக்கியுள்ளனர், மீன்பிடிக்கச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர், கார் கவிழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார்.

இதுகுறித்து கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பவ இடமான குட்டையும் சாலையும் ஒரே மட்டத்தில் இருக்கிறது. குறைந்தபட்சம் 3 அல்லது 4 அடிக்கு ஒரு சுற்றுச்சுவர் அல்லது வேலி போட்டிருக்கலாம். ஆனால், எதுவும் செய்யவில்லை. அந்த இடத்தில் நிறைய சம்பவங்கள் நடந்தும், கடந்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை.

முதலில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அத்தனை ஊழல் நடந்தது. ஆனால், எங்கும் விளக்கு அமைக்கப்படவில்லை.

சம்பவ இடத்தில் வெளிச்சம் இருந்திருந்தால், இதுபோன்று நடந்திருக்காது. இதுவும் ஒரு காரணம்.

சம்பவம் தொடர்பாக நேற்றிரவு தொடங்கிய விசாரணையில் இன்று காலையிலேயே குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில், அதிகபட்ச தண்டனையாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் எங்குமே நடக்கக் கூடாது.

ஒரு பெண்ணை அனுமதியில்லாமல் தொடுவது என்பது மோசமான விஷயம்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்பார். ஏனெனில், இது போதைப் பழக்கத்தால் ஏற்பட்டது. இனிமேல் நானே காவல்துறையினருடன் இரவு ரோந்து செல்லவுள்ளேன். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு உட்பட்ட பகுதியிலாவது இவ்வாறான சம்பவங்கள் இருக்கக் கூடாது என்பது என்னுடைய ஆசை" என்று தெரிவித்தார்.

Summary

TVK MLA Sukumar assures that the CM will take strict action regarding the sexual assault and murder of the girl in Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.