தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவை சூலூர் சிறுமி கொலை: சம்பவ இடத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆய்வு!

கோவை சூலூர் சிறுமி கொலையில் சம்பவ இடத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்.

News image

சூலூர் சம்பவம் - Image grab from Video

Updated On :23 மே 2026, 1:35 pm IST

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

சூலூர் அருகே கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காணாமல் போன சிறுமி, கண்ணம்பாளையம் குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி மக்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக காவல் துறைத் தலைவர் (DGP) சந்தீப் ராய் ரத்தோர் கோவைக்கு நேரில் வருகை தந்தார்.

சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் குளம் பகுதிக்குச் சென்ற அவர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குற்றவாளிகள் எந்த வழியாக வந்திருக்கக்கூடும், தடயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற டிஜிபி, அங்கு இவ்வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.