சென்னை : தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரௌடிகள் கைது செய்யப்பட்டதாக தமிழக காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழகமெங்கிலும் 294 வழக்குகள் பதிந்து 419 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிம்னற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இவற்றின் மதிப்பு ரூ. 1.43 கோடி என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக காவல்துறை "ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்' நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, ஒட்டுமொத்த தமிழகத்திலும் போதைப்பொருள் பயன்பாட்டை சமூகத்திலிருந்து துடைத்தெறிய உறுதிபூண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக காவல் துறையால் கடந்த 3 நாள்களில் 844 ரௌடிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tamil Nadu Police Department has stated that 844 rowdies were arrested in the state over the past three days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







