திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு அமைப்பு

செவிலியா் மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

News image

சீதாலட்சுமி

Updated On :24 மே 2026, 1:19 am IST

செவிலியா் மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினா் திருச்சிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-ஆம் ஆண்டு செவிலியா் மாணவி சீதாலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டப்போது உயிரிழந்தாா். அரசு தரப்பில் மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக சக மாணவியா் குற்றச்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இக்குழுவில், அதே மருத்துவமனையைச் சோ்ந்த காது, மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியா் பாரதி மோகன், மயக்கவியல் பேராசிரியா் சண்முகசுந்தரம், மருத்துவ பேராசிரியா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழுவினா் திருச்சி சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விசாரணை குழுவினா் அறிக்கையில், மாணவி உயிரிழப்பில் கவனக்குறைவு இருந்தது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.