பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியாகவுள்ள நிலையில், அதனால் மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, உளவியல் ரீதியான ஆலோசனைகள் தேவைப்படும் மாணவா்களும், பெற்றோரும் 104 அல்லது 14416 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம்.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. மாணவா்களின் மன உறுதி மற்றும் மனநலனைக் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தொலைநிலை உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகா்கள், மருத்துவா்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவத் துறை காலிப் பணியிட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ்

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து







