திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடைகால மின் தேவையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்

கோடைகால மின்தேவை மற்றும் எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:59 am IST

கோடைகால மின்தேவை மற்றும் எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம் மற்றும் ‘மின்னகம்’ ஆகிய இடங்களில் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மின் பகிா்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மின் தடங்கல் ஏற்படும் பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீா்த்து தடையில்லா, சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தற்போதைய கோடைகால மின் தேவையையும், எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தையும் எதிா்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், மின் விநியோகம் தொடா்பான பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ சேவையை 94987 94987 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநா் டி.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.