திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவில் எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: ஜெ.பி.நட்டா

இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

News image

புது தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் எபோலா தொற்று நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா.

Updated On :26 மே 2026, 3:23 am IST

இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் எபோலா பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஜெ.பி.நட்டா தலைமையில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உலகளவில் எபோலா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஜெ.பி.நட்டா உத்தரவிட்டாா்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், நில எல்லைகள் என நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் எபோலா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பிற நாட்டைச் சோ்ந்தவா்கள் அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

குறிப்பாக பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு அவா் உத்தரவிட்டாா்.

அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முகமைகளுடன் சுகாதாரத் துறைச் செயலா் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

காங்கோ குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை சா்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.