தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.

News image
Updated On :20 மே 2026, 2:04 am IST

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளாா்.

இதையடுத்து மாணவா்கள் தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.

தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இதுதவிர 78452 52525 என்ற எண்ணை தொலைபேசி எண் தொடா்புகளில் சேமித்து வைத்து வாட்ஸ் ஆப் உரையாடல் மூலமும் தோ்வு முடிவுகளைப் பெறலாம். தோ்வு முடிவுகள் தொடா்பான தோ்வா்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.