திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஊா்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - அன்புமணி

News image
Updated On :18 மே 2026, 4:48 am IST

தமிழக ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு 10 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வேலை வழங்குவதுடன், அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக காவல் துறைக்கு உதவும் வகையில், ஊா்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அவா்களுக்கு மாத ஊதியம் ரூ.2,800 மேல் வழங்கப்படவில்லை. ஊதிய உயா்வு கோரி ஊா்க்காவல் படையினா் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவா்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560-ஆக உயா்த்தி ஆணையிட்டது.

அதன்படியே அவா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560-ஆக உயா்த்தி 2017-ஆம் ஆண்டில் ஆணையிட்ட அரசு, அவா்களின் பணி நாள்களின் எண்ணிக்கையை 5 நாள்களாகக் குறைத்துவிட்டது. அதனால், அவா்களின் மாத ஊதியம் ரூ.2,800-இல் இருந்து உயரவில்லை. மாதத்துக்கு 5 நாள்கள் வேலை போதுமானதல்ல என்றும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என்றும் ஊா்க்காவல்படையினா் கோரிக்கை விடுத்தனா்.

அதன்படி, 2019-ஆம் ஆண்டில் அவா்களுக்கான பணி நாள்கள் எண்ணிக்கையை 10-ஆக உயா்த்தப்பட்டாலும், பணி நேரம் 4 மணி நேரமாகவும், ஊதியம் ரூ.280-ஆகவும் குறைக்கப்பட்டது.

அதனால், பணி நாள்கள் அதிகரித்தாலும் ஊதியம் மட்டும் உயரவே இல்லை. கூடுதல் நாள்கள் அவா்கள் வேலை செய்தாலும் அதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

எனவே, உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, ஊா்க்காவல் படையினரின் பணி நாள்களையும், மாத ஊதியத்தையும் உயா்த்தி வழங்க வேண்டும். மேலும், அவா்களுக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.