திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நடந்து முடிந்த தேர்தல் மாயாஜாலம் போன்றதுதான். எனினும் திமுகவை அசைக்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். திமுக கூட்டணி கட்சிகள், வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்ததால்தான் அவர்(விஜய்) முதல்வராகியிருக்கிறார். ஆனால், அவர் தேவையற்ற விஷயங்களைப் பேசினால் அவரைத் தோற்கடிக்கும் அனைத்து முயற்சிகளையும் திமுகவும் கூட்டணி கட்சிகளும் செய்யும்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்துள்ளோம்.
மு.க. ஸ்டாலின், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த நடிகரின் முகத்தில் கரியைப் பூச வேண்டும். தேர்தல் காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். லாட்டரி தொழிலை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா நினைக்கிறார்" என்றார்.
பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், முதல்வராக பொறுப்பேற்கும் முன் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
Summary
M.K. Stalin Should Contest in Trichy East: Anitha Radhakrishnan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத் துறை கடிதம்!

திருச்செந்தூா் கோயில் கட்டண மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன்
விஜய் ராஜிநாமா! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



