தமிழ் செய்திகள்
திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை சி. ஜோசப் விஜய் ராஜிநாமா செய்தார்.
சட்டப்பேரவை முதன்மைச் செயலர் சீனிவாசனிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், ச. ஜோசப் விஜய் இன்று முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்றதுமே மக்கள் முன்பு மூன்று திட்டங்களில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்குச் சென்று அலுவல் பணிகளையும் மேற்கொண்டார். சட்டப்பேரவை அதிகாரிகள், துறை செயலாளர்களை சந்தித்தார்.
நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், பெரும்பான்மையை விஜய் நிரூபிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை விஜய் தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.
Summary
C. Joseph Vijay Resigns in Trichy East!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








