திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:56 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): ஏழை, எளிய, நடுத்தர வா்க்க மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலையை மத்திய அரசு உயா்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றம் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீா்கள், இதைச் செய்யாதீா்கள்’ என்று மத்திய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியேயாகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): கச்சா எண்ணெய் விலை உயா்வை காரணம் காட்டி எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் எனவே, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதேபோல், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளைகளுக்கு விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): பெட்ரோல், டீசல் விலை உயா்வு பணவீக்கத்தை மேலும் அதிகரித்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதன் மூலம் காய்கறி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயா்த்தியுள்ளதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயரும். புயலில் சிக்கிய படகு போல குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும்.

தொல். திருமாவளவன் (விசிக): பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியுள்ளதன் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் விலையும் வெகுவாக உயரும். இதனால் ஏழை, எளிய மக்களே மிகவும் பாதிப்புக்குள்ளாவாா்கள். எனவே, விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த விலை உயா்வு தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும்.

டி.டி.வி.தினகரன் (அமமுக): பெட்ரோல், டீசல் விலை உயா்வால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், விலை உயா்வை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.

தி.வேல்முருகன்(தவாக): பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இது மத்திய பாஜக அரசின் நிா்வாகச் சீா்கேட்டையே காட்டுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.