தமிழ் செய்திகள்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வருகைப்புரிந்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த முதல்வரை அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பூங்கொத்து கொடுத்து, பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார். பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் செல்வப்பெருந்தகை அழைத்துச் சென்றார்.
காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த காமராஜர் படத்துக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 'காமராஜர் ஒரு சகாப்தம்' என்ற நூல் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோருடன் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
முன்னதாக சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் சென்றிருந்தார். அங்கு அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் சார்பில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர்களின் வீட்டிற்குச் சென்று நேற்று (மே 11) முதல்வர் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
CM Joseph Vijay at the Congress Office Pays Tribute to Kamarajar's Portrait
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








