தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

கோட் சூட் அணிந்து பதவியேற்ற முதல் முதல்வர்!

நாட்டின் விடுதலைக்குப் பிறகு, கோட் சூட் அணிந்து பதவியேற்ற முதல் முதல்வர் விஜய்

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - PTI

Updated On :10 மே 2026, 1:04 pm IST

நாட்டின் விடுதலைக்குப் பிறகு, கோட் சூட் அணிந்து முதல் முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் முதல்வர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

விழாவில் விஜய் கோட் சூட் அணிந்துகொண்டு பதவியேற்ற நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு, கோட் சூட் அணிந்து பதவியேற்ற முதல் முதல்வர் என்ற பெருமையை சி. ஜோசப் விஜய் பெற்றுள்ளார்

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - PTI

நாட்டின் விடுதலைக்குப் பிறகு, ஓ.பி. ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், எம். பகவத்சலம், சி.என். அண்ணாதுரை, வி.ஆர். நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிடோரும், தற்போது சி. ஜோசப் விஜய்யும் முதல்வராகப் பதவியேற்றுள்ளனர். ஆனால், விஜய்தான் முதல்முறையாக கோட் சூட் அணிந்துகொண்டு முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.

Summary

The first Chief Minister to take oath wearing a suit is C Joseph Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.