பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக 73 இடங்களுடன் எதிர்க்கட்சி இடத்தைப் பெற்றுள்ளது.
தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை வென்ற விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து விஜய் பதிவிட்டுள்ளதாவது,
''பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நலனே நமது ஒரே குறிக்கோள். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தின் முன்னேற்றத்திலும் தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று ராகுல் காந்தியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து விஜய் பதிவிட்டுள்ளதாவது,
''மக்களவையின் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்த இனிய நல்வாழ்த்துகளுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்!
பொதுச்சேவையில் சிறந்து விளங்குவதிலும், அனைவரின் கூட்டு ஒத்துழைப்பும் தேவைப்படும் நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிக்காப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.'' எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
TVK Vijay thanks Prime Minister Modi and Rahul
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

நெதர்லாந்து பிரதமருடன் பேசிய பிரதமா் மோடி!
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


