சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே 7) நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லை, அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவது உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், கட்சியின் நலன் கருதி மூத்த நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும், என்ன முடிவெடுத்தாலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வரும் 10 ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
திமுகவின் திட்டங்கள் தொடர்ந்தால்தான் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்றும் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சித் தலைவர் யார்? திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தவெகவுக்கு ஆதரவா? விசிக, இடதுசாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு


