மகாத்மா ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாளையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துரையாடினர்.

தில்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜோதிபா புலேவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

PTI
முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். மிகவும் இயல்பாக இருவரும் பேசிக்கொண்டனர்.

அரசியல்ரீதியாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் இரு தலைவர்களும் பேசிக்கொண்டது இணையத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோருடனும் ராகுல் காந்தி பேசினார்.
PM Modi interacts with Rahul gandhi in parliament on Mahatma Jyotiba Phule 200th birth anniversary
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு

ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி! - அசாம் பிரசாரத்தில் ராகுல் கடும் தாக்கு!

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? ராகுல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை




